சமத்துவத்தின் சோகக் கதை

சுருக்கம்:
இன்டெர்நெட்டின் பரவலினால், பணம் படைத்தவர்களின் வாழ்க்கை, உலக மக்களின் பார்வையின் முன்னிலையிலும் இருக்கிறது. வருமான வேறுபாட்டை அவரவர் தத்தம் அரசியல் கொள்கைகளின் மூலம் காண்கின்றனர் - இடதுச் சாரிக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள், வருமான வரி மற்றும் சமூக நலத் திட்டங்களின் மூலம் பணம் படைத்தவர்களிடம் இருந்து நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு மறுப்பகிர்வுச் செய்வதை முக்கியத் தீர்வாகக் கருதுகின்றனர், வலதுச் சாரிக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலம், அனைவரது வாழ்க்கைத் தரமும் முன்னேறும் என்றுக் கருதுகிறார்கள். இந்தப் புத்தகத்தில், வரலாற்றில், வருமான வேறுபாடு, நீண்டக் காலத்திற்கு அதிக அளவில் குறைவதற்குச் சோகத்தை அளிக்கும் காரணிகளே மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கின்றன என்றுச் சாட்சியங்களோடு எடுத்துக் காட்டுகிறார். வரலாற்றில் நடந்த நிகழ்வுகள், வருமான வேறுபாட்டை எவ்வாறுக் குறைத்தன என்பதை அலசியிருக்கிறார். இனம் மற்றும் மதம் சார்ந்தக் காரணங்களை இந்த அலசலில் கருதவில்லை.
அலசல்:
கடைசி 10 வருடங்களில், உலகெங்கிலும் உள்ள வருமான வேறுபாடு வெகு அதிகமாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது - உலகின் பாதிப் பண வளத்தை வைத்திருக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 2010-ஆம் வருடம் 388-இல் இருந்து 2014-ஆம் வருடத்தில் 85 ஆகி, 2015-ஆம் வருடத்தில் 62 ஆகக் குறைந்தது. வெளிநாட்டு வங்கிகளில் திருட்டுத்தனமாக வைத்திருக்கும் சொத்துகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த எண்ணிக்கை இதற்கு மேலும் குறைந்து விடும். வரலாற்றில், பல நாடுகளில், வருமான வேறுபாடு அடிக்கடி அதிகரித்து உள்ளது. 2,000 வருடங்களுக்கு முன், ரோமப் பேரரசில் இருந்த வருமான வேறுபாடு, இன்றையக் காலத்தில் இருந்த அளவிற்கு ஒத்து இருந்தது. முதலாம் உலகப் போரின் முன் பிரிட்டன் நாட்டில், வருமான வளர்ச்சியின் உச்சத்தில் உள்ள 10% பணக்காரர்கள், அந்த நாட்டில் உள்ள தனியார் பண வளத்தில் 92% பங்கு வைத்துக் கொண்டிருந்தனர். பலப் புத்தகங்கள் போல், வருமான வேறுபாட்டின் வளர்ச்சி அதிகரித்ததன் காரணங்களை அலசி ஆராய்வதற்குப் பதிலாக, இந்தப் பத்தகம் வருமான வேறுபாடுகள் குறைவதற்கானக் காரணிகளை அலசி ஆராய்கிறது. இந்தப் புத்தகம், வருமான வேறுபாட்டை அலசுவதற்கு, ஜினி குணகத்தைப் பயன்படுத்துகிறது. ஜினி குணகம் அதிகமாக இருந்தால், வருமான வேறுபாடு அதிகமாக இருக்கும். ஜினி குணகம் குறைவாக இருந்தால், வருமான வேறுபாடுக் குறைவாக இருக்கும். ஜினி குணகத்தைக் கணிப்பதற்கு, வருமானம் மற்றும் செல்வத்தைப் பற்றியத் தகவல்கள் (நேரடியாக இல்லாமல், நில வாடகைக்கும் ஊதியத்திற்கும் உள்ள விகிதம், ஒவ்வொருக் குடிமகனு(ளு)க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவிற்கும் ஊதியத்திற்கும் உள்ள விகிதம் போன்ற அளவுகளைப் பயன்படுத்தினாலும்) தேவை என்பதால், காலத்தில் பின்நோக்கிச் செல்லச் செல்ல, வருமானம் மற்றும் செல்வத்தைப் பற்றியத் தகவல்களின் நம்பகத்தனம் குறைந்துக் கொண்டேப் போகிறது. ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றை உறுதிபடுத்தும் வகையில் ஆவணங்கள் அதிகமாக இருப்பதால், அந்த நாடுகளை ஆசிரியர் தனது அலசலில் பயன்படுத்துகிறார்.
மனிதக் குலம், வேட்டைக்காரர்களாக இருந்தப் பொழுது, ஒரு இடத்தில் தங்காமல் பல இடங்களுக்குச் சென்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதால், வருமான வேறுபாடுகள் குறைந்தே இருந்தது. அவர்களிடையே, வருமானத்தின் உச்ச நிலையில் இருந்த செல்வச் செழிப்பானவர்களை, அவர்களது சமாதியில் இருந்துத் தோண்டி எடுக்கப்பட்டப் பொருட்கள் மூலம் அறிந்துக் கொள்ளலாம். ஆடு மாடு மேய்க்கவும் விவசாயம் செய்யவும் ஆரம்பித்தவுடன் வருமான வேறுபாடு அதிகரிக்க ஆரம்பித்தது. அனைவருக்கும், வளத்தையும் தொழிலாளர்களையும் விநியோகம் செய்ய வேண்டி இருந்தது. விவசாயி மற்றும் ஆடு மாடு மேய்ப்பவர்களின் சமூகத்தில், தேவைக்கு அதிகமாக இருந்த வளங்கள், நிலத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும் உரிமை மற்றும் தங்களுடைய வருங்காலச் சந்ததியினருக்கு செல்வத்தை ஒதுக்கி வைக்கும் மனப்போக்கினால் வருமான வேறுபாடு அதிகரிக்க ஆரம்பித்தது. இவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இராஜ்யங்களில் இதனால், ஜினி குணகம் அதிகமாக இருந்தது. இந்த இராஜ்யங்களில், அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு, வருமானத்தையும் வளங்களையும் கூட்டிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகமாகக் கிடைத்தன. விவசாய மற்றும் ஆடு மாடு மேய்க்கும் சமூகங்கள், அரசியல் மற்றும் இராணுவத்தில் புதிய அணுகுமுறைகள் மூலம், தங்களிடையே நடக்கும் சண்டைச் சச்சரவுகளுக்கும் அண்டையில் இருக்கும் குழுக்களிடம் இருந்து வரும் ஆக்கிரமிப்புகளுக்கும் தீர்வுக் கண்டாலும், அதே அணுகுமுறைகள், வருமான வேறுபாடுகளை அதிகரித்தன. மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரித்தப் புதியப் படைப்புகளான நகரமயமாக்கல், வணிகமயமாக்குதல், நிதித் துறையில் புதியக் கண்டுப்பிடிப்புகள், உலகளாவிய வணிகம் மற்றும் தொழில் புரட்சி ஆகியவை மக்களிடையே இருக்கும் வருமான வேறுபாடுகளையும் வெகுவாக அதிகரித்தன. இதன் பின் விளைவாக, சமூகத்தில் அரசியல், இராணுவம், நிர்வாகம் மற்றும் வணிகத் துறைகளில் இருந்தவர்கள் ஆட்சியாளர் பதவியில் அமர்ந்து, மற்றவர்களை ஆண்டனர். விவசாய மற்றும் ஆடு மாடு மேய்க்கும் சமூகங்களில் கிடைத்த அதிகப்படியான வளங்கள், அந்தச் சமூகங்கள், உருவாக்குபவர்கள் மற்றும் நுகர்வோர்கள் என்று இருக் கூட்டங்களாகப் பிரிந்தது. உயர்ந்த நிலையில் இருந்தவர்களுக்கு அதிக அளவில் செல்வமும் பணமும் குவித்துக் கொள்ள உதவிய அதேக் காரணிகள், அந்தச் செல்வம் ஒரு சிலர் கைகளில் மட்டுமே இருப்பதைத் தவிர்க்கவும் உதவியது. ஒரு சிலர் அளவிற்கு அதிகமாகச் செல்வத்தைக் குவிக்க ஆரம்பித்தவுடன், உயர்ந்த நிலையில் இருந்த மற்றவர்கள், அவர்களின் மேல் ஒருக் கண் வைத்துக் கொண்டிருந்தனர். இதனால், ஒரு சிலர் அதிக அளவில் செல்வத்தைக் குவிப்பதுக் கடினமாக இருந்தது. இது, அவர்களதுத் தயாளக் குணத்தினால் நடக்கவில்லை. சமூகத்தில் உள்ள அளவுக்கு அதிகமான வளங்களில் தங்களுக்கும் பங்குக் கிடைக்க வேண்டும் என்றத் தன்னார்வம் அவர்களை இவ்வாறுச் செய்யத் தூண்டியது. சமூகங்களில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள், பணம் மற்றும் மற்ற வளங்களைத் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து அதனை வைத்து மேலும் செல்வத்தைச் சேர்ப்பது, காலங்காலமாக வரலாற்றில் ஒரு சில யுக்திகளின் மூலம் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன - அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்துவது, கோட்பாடுகளில் இருக்கும் ஓட்டைகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வது, வணிகச் சந்தையில் பயன்படும் தகவல்களில் உள்ள வேறுபாடுகளைப் பயன்படுத்திப் பணம் பார்ப்பதுப் போன்றவை இவற்றில் அடங்கும். வரலாற்றில் வருமான வேறுபாடுகளை அலசுவதற்கு, கி.மு. 206-இல் இருந்து கி.பி 220 வரைச் சீனாவை ஆண்ட ஹான்  பேரரசையும் ரோமப் பேரரசையும் உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த இருப் பேரரசுகள் பற்றி அதிக அளவில் ஆவணங்கள் இருப்பதால் வருமான வேறுபாட்டை அலசுவதற்கு உதவியாக இருக்கிறது. லஞ்ச ஊழல் தான் வருமான வேறுபாட்டை அதிகரிக்கும் என்ற நம்பிக்கைப் பரவலாக இருந்தாலும், அதை அழிப்பதால், வருமான வேறுபாடு குறைவதில்லை. ஆசிரியர் 4 காரணிகளைச் சுட்டிக் காட்டுகிறார் - பன்னாட்டுப் போர்(உதாரணத்திற்கு, முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள்), வரலாற்றை மாற்றும் புரட்சிகள் (சோவியத் யூனியன் மற்றும் சீனாவில் நடந்த கம்யூனிஸ்ட் புரட்சி), அரசு அழிவு (உதாரணத்திற்கு, சோமாலியா நாடு) மற்றும் மக்களைக் கொல்லும் தொற்றுநோய்கள் (உதாரணத்திற்கு, ப்ளாக் டெத் மற்றும் ப்ளேக்).
பன்னாட்டுப் போர்கள் சில விதங்களில் தான் வருமான வேறுபாட்டை அதிக அளவில் நீண்டக் காலத்திற்குக் குறைக்கின்றன. இரண்டு உலகப் போர்களைப் போல், பன்னாட்டுப் போர்கள் மொத்த சமூகத்தையும் பங்குக் கொள்ள வைக்கின்றன. இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்கள் எவ்வளவுக் குரூரமாக இருந்தாலும், அவை அந்த இரு நாடுகளுக்குள்ளும் வருமான வேறுபாட்டைக் குறைப்பதில்லை - உதாரணத்திற்கு, 1980-களில் நிகழ்ந்த இரான் இராக் போர். பன்னாட்டுப் போர்கள், அதிக அளவில் அழிவு, மக்களைக் கஷ்டப்படுத்தும் அளவுக்கதிகமான வரிச் சுமை, உயர்ந்த அளவுப் பண வீக்கம் மற்றும் உலகளாவிய வணிகத்தின் குறுகல் போன்ற விளைவுகளை உண்டாக்குகின்றன. இரண்டு உலகப் போர்களின் காலத்தில் நடந்த நிகழ்வுகளை உறுதிப்படுத்தும் வகையில் ஆதாரங்கள் அதிகமாக இருப்பதால், வருமான வேறுபாட்டின் மீதான விளைவுகளை அலச முடிகிறது. அவற்றிற்கு முன்னர் சென்றால், அலசுவதற்கு ஏற்ற ஆதாரங்கள் குறைகின்றன. இதனால், குறைந்த ஆதாரங்களை வைத்துச் செய்யப்படும் அலசல்கள் நிறையத் தவறுகளோடு இருக்கின்றன. ஐரோப்பாவைப் பொறுத்தவரை, மேலேக் குறிக்கப்பட்ட 4 காரணிகளில் ஏதாவது ஒன்றுத் தலைத் தூக்கியப் பின், வருமான வேறுபாடுக் குறைய ஆரம்பித்தது. ஆட்டோமன் பேரரசின் ஆவணங்களில் இருந்து, ஐரோப்பாவில் வருமான வேறுபாடுக் குறைந்த அதே நேரத்தில் அங்கும் வருமான வேறுபாடுக் குறைந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. தெற்கு அமெரிக்கா-வில் 16-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஸ்பெனிஷ் ஆதிக்கத்தின் பொழுதும், அந்நாடுகளில் அதன் பின் நடந்த சுதந்திரப் போராட்டங்களினாலும், வருமான வேறுபாடு அதிகமாகக் குறைந்தது. அமெரிக்க நாட்டில், 1929-இல் நடந்த க்ரேட் டிப்ரெஷன் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் வருமான வேறுபாடு வெகுவாகக் குறைந்தது.  1776-இல் நடந்த அமெரிக்கா-வின் சுதந்திரப் போராட்டம் வருமான வேறுபாட்டைக் குறைத்தாலும், அதிக அளவில் அதனைக் குறைக்கவில்லை. 1860-களில் நிகழ்ந்த உள்நாட்டுப் போர், அமெரிக்கா-வின் சுதந்திரப் போரைக் காட்டிலும், குறைந்த அளவில் வருமான வேறுபாட்டைக் குறைத்தது. அமெரிக்கா-வின் உள்நாட்டுப் போர், செல்வங்களை தெற்கு மாநிலங்களில் இருந்த செல்வந்தர்களிடம் இருந்து வடக்கு மாநிலங்களில் இருந்தச் செல்வந்தர்களிடம் மாற்றியது. வருமான வேறுபாட்டைக் குறைப்பதில் பன்னாட்டுப் போருக்கு உள்ளப் பங்கை, இரண்டாம் உலகப் போரில் ஜப்பான நாட்டின் நிலைமையை உதாரணமாகப் பயன்படுத்தியிருக்கிறார். அந்த நாட்டில், உயர்ந்த நிலையில் இருந்த 1% செல்வந்தர்கள், இரண்டாம் உலகப் போருக்கு முன் நாட்டின் வருமானத்தில் 20% பங்கிலிருந்து போருக்குப் பின் 6% ஆகக் குறைந்தது. 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில், மேற்கத்திய நாடுகள், ஜப்பான் நாட்டை அவமானப்படுத்தியதை அடுத்து, ஒற்றைக் குறிக்கோளோடு மேற்கத்திய நாடுகளைப் போல் மாறுவதற்குரியப் பெருமுயற்சியில் ஜப்பான் இறங்கியது. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா-விடம் தோற்றவுடன், அமெரிக்கா, ஜப்பான்-இன் உயரடுக்கு மக்களுக்கு இரண்டாம் உலகப் போரில் அதிகப் பங்கு இருந்ததாகக் கருதி, அவர்களைத் தண்டிக்க மறுப்பகிர்வுக் கொள்கைகளை நாடெங்கும் செயல்படுத்தினர். இரண்டாம் உலகப் போரின் பொழுது, மேற்கத்திய நாடுகள் வெவ்வேறு விதத்தில் வருமான வேறுபாட்டைக் கையாண்டனர் - பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் தங்களது நாட்டில் உள்ளச் செல்வந்தர்களின் மீதுள்ள வருமான வரிச் சுமையை அதிகரித்தனர். ஜெர்மனி, ரஷ்யா மற்றும் ஆஸ்ட்ரீயா ஹங்கரி பேரரசுகள் அதிக அளவுப் பணத்தை அச்சிட்டு அங்குள்ளப் பண வீக்கத்தைக் கூட்டியும் அதிக அளவில் கடன் வாங்கியும் போரை நடத்தினர். இந்த இரண்டு அணுகுமுறைகளிலாலும் செல்வந்தர்களின் செல்வத்தைக் குறைத்து ஏழை மக்களின் பணத்தை அதிக அளவில் பாதிக்காமல், போருக்கான நிதியைத் திரட்டினர். இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பின், காபிடலிஸத்தைப் பின்பற்றிய நாடுகள், பொதுநலத்தைக் குறிக்கோளாக வைத்தக் கொள்கைகளைச் செயல்படுத்தி, குறைவான வருமான வேறுபாட்டின் நல்லப் பயன்களை அதிகக் காலம் நீட்டிக்க முயன்றனர்.
பன்னாட்டுப் போர்களின் விளைவினால், அரசியல் புரட்சிகள் வெடிக்கின்றன. ஒரே நாட்டிற்குள் அவை வெடிப்பதால், வருமான வேறுபாட்டை அந்த நாட்டில் மட்டுமேக் குறைக்கிறது. வன்முறை நிறைந்த மறுப்பகிர்வுகளும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளும் வருமான வேறுபாட்டை அதிக அளவில் குறைக்கின்றன. அரசியல் புரட்சிகள் குறைந்த வன்முறையோடு நிகழ்ந்த நாடுகளில் (உதாரணத்திற்கு, ஃப்ரென்ச் புரட்சி), வருமான வேறுபாடுக் குறைவாகவே இறக்கம் கண்டது. ஸோவியத் யூனியன் நாட்டில் நடந்த கம்யூனிஸ்ட் புரட்சி, முதலாம் உலகப் போரின் முடிவில் வருமான வேறுபாட்டை அதிகமாகக் குறைத்தது. வன்முறை நிறைந்த மறுப்பகிர்வுகளும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளும் செல்வந்தர்களின் பண வளத்தைக் குறைத்தாலும் ஏழை மக்களின் செல்வத்தை அதிகரிக்கவில்லை. முதலாம் உலகப் போரின் முன் வருமான வேறுபாடு இருந்த அளவை விட, கம்யூனிஸ்ட் புரட்சியின் பின் இருந்த வருமான வேறுபாடுக் குறைவாக இருந்தது. கம்யூனிஸ்ட் தலைவர்கள், செல்வந்தர்கள் அதிகமாக வைத்திருந்தத் தனியார் சொத்தைப் பறித்து அரசின் கையில் கையகப்படுத்துவதைத் தங்கள் குறிக்கோளாகக் கருதினர்.
கம்யூனிஸத்தின் தீய விளைவுகள் ஸோவியத் யூனியன்-இல் முதலாக வெளிப்பட்டன. ஸோவியத் யூனியன்-இல் இருந்தத் தனது ஆசிரியர்கள் காட்டியப்  பாதையில் நடந்துச், சீனா-வை நரகத்திற்குக் கொண்டுச் சென்றார் மா ஸே துங்க். அவரது 'க்ரேட் லீப் ஃபார்வர்ட்' திட்டத்தினால், 1959-இல் இருந்து 1961-இற்குள் சீனா-வை தொழில் புரட்சியைத் துரிதமாகச் செயல்படுத்தச் செய்த முயற்சியினால், குறைந்தபட்சம் 200 லட்ச மக்களில் இருந்து 400 அதிகபட்ச மக்கள் வரை பட்டினியால் இறந்தனர். மேலும், சீன அரசால், கொலைச் செய்யப்பட்டோ தற்கொலைக்குத் தள்ளப்பட்டோக் குறைந்தபட்சம் 60 லட்சம் மக்களும் அதிகப்பட்சம் 100 லட்சம் மக்களும் இறந்தனர். 1962-ஆம் வருடம் நிகழ்ந்தச் சீன இந்தியப் போரில், இந்தியா-வின் தோல்வியையும் சீனா-வின் வெற்றியையும் அலசும் பொழுது, சீனா-வின் தலைவர் பைத்தியம் தெளியாதச் சர்வாதிகாரி என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.  க்யூபா மற்றும் நிக்கராகுவா நாடுகளில் ஏற்பட்ட கம்யூனிஸ்ட் புரட்சிகள் அதிக அளவில் உயிர் சிதைவு இல்லாமல் அங்குள்ள வருமான வேறுபாட்டைக் குறைத்தன.
உள்நாட்டுக் கிளர்ச்சியால் அதிக அளவு வன்முறை வெடிப்பதன் விளைவாக ஒரு நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாகத் திறன் அழியும் பொழுது, வருமான வேறுபாடு வெகுவாகக் குறைகிறது. இராஜ்யங்களும் நாடுகளும் அவர்களது எல்லைகளுக்குள் நிகழும்  பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றனர். அரசின் பாதுகாப்பு இல்லாமல், செல்வத்தை உருவாக்குவதற்குத் தேவையான சூழ்நிலை இல்லாமல் போகிறது. இதனால், அதிகச் செல்வம் இருக்கும் செல்வந்தர்கள் தங்களதுப் பண வளத்தை இழக்கின்றனர். ஏழை மக்கள், தங்களிடம் ஏற்கனவேப் பண வளம் இல்லாததால், அரசின் பாதுகாப்புக் குறைவது அவர்களைப் பாதிப்பதில்லை. இதற்கு உதாரணமாக, சீனா-வில் கி.பி. 618 வருடத்தில் இருந்து கி.பி 881 வருடம் வரைக்கும் இருந்த டங்க் பேரரசு மற்றும் மேற்கத்திய ரோமப் பேரரசுகளைப் பயன்படுத்துகிறார். டங்க் பேரரசின் அழிவுப் பெருமளவில் இருந்ததால், அந்த இராஜ்யத்தின் உயர்த்தட்டு மக்களைப் பற்றிய ஆதாரங்கள் வரலாற்றில் இருந்து ஒட்டு மொத்தமாக மறைந்து விட்டன.
உலகெங்கும் பரவும் தொற்றுநோய்களான ப்ளேக், பெரியம்மை, தட்டம்மை பல லட்சம் மக்களைக் கொன்று, நிதி வளர்ச்சியை நிறுத்தியுள்ளது. இந்தத் தொற்றுநோய்களின் வீரியத்தினால், தொழிலாளர்களின் எண்ணிக்கைக் குறைந்து மீதம் உள்ளத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கு வழி வகுத்தது. இந்தத் தொற்றுநோய்களின் பரவல், நிலத்தின் விலையைக் குறைத்தன. செல்வந்தர்கள் நிலத்தின் மதிப்பை நம்பி இருப்பதால், இதனால் வருமான வேறுபாடுக் குறைகிறது. 14-ஆம் நூற்றாண்டின் இரண்டாவதுப் பாதியில் ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆசியா மற்றும் ஆசியாவில் அதிக எண்ணிக்கையில் மக்களைக் கொன்ற ப்ளேக் நோயும் 16-ஆம் நூற்றாண்டில் அஸ்டெக் பேரரசைக் கைப்பற்றிய ஸ்பானிஷ் படைகளிடம் இருந்துப் பரவிய தொற்றுநோய்களும் இதற்கு உதாரணமாகக் கொடுக்கப்படுகின்றன. அஸ்டெக் பேரரசில், ஸ்பானிஷ் வீரரான ஹெர்னன் கோர்டஸ் 1519-ஆம் வருடத்தில் ஆக்கிரமித்தப் பொழுது, பெரியம்மை வெடித்தது. பெரியம்மையின் வீரியத்தை எதிர்க்கும் சக்தி அஸ்டெக் பேரரசில் உள்ளவர்களுக்குக் குறைவாக இருந்தது. ஸ்பானிஷ் வீரர்களுக்கு, ஐரோப்பா-வில் காலங்காலமாகத் தோன்றியத் தொற்று நோய்களின் பரவலினால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருந்தது. இதனால், அஸ்டெக் பேரரசில் அதிக அளவில் இறப்புகள் நிகழ்ந்ததற்கு எதிர்மறையாக ஸ்பானிஷ் வீரர்களிடையே வெகுக் குறைவாக இறப்புகள் நிகழ்ந்தது. இது, அஸ்டெக் மக்களின் கண்களில், ஸ்பானிஷ் வீரர்கள் , அஸ்டெக்  புராணங்களில் விவரித்த கடவுள்கள் போல் தோன்றினர். தொற்றுநோய்களைப் போல் பஞ்சங்கள் மக்களை அதிக அளவில் கொன்றாலும், அவற்றிற்குப் பின், வருமான வேறுபாடுச் சிறிய அளவிலேயேக் குறைகிறது. பஞ்சங்கள் பெரும்பாலும் ஏழை மக்களையேப் பாதிக்கின்றன. பஞ்சங்கள், அரசாங்கத்தின் மோசமானக் கோட்பாடுகளின் விளைவினால் நிகழ்கின்றன - உதாரணத்திற்கு, பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தின் கீழ் இந்தியாவில் நிகழ்ந்தப் பஞ்சங்கள்.
வருமான வேறுபாட்டின் மற்றக் காரணிகளையும் ஆசிரியர் அலசி (நிலச் சீர்திருத்தம், பொருளாதாரச் சரிவுகள், ஜனநாயகம், கல்வி, நிதி வளர்ச்சி), அவை வருமான வேறுபாட்டை அதிகமாகக் குறைப்பதில் தாக்கம் இல்லாததைக் குறிப்பிடுகிறார். நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள், முதலில் வருமான வேறுபாட்டைக் குறைத்தாலும், உயர்தட்டு மக்கள் அந்த நடவடிக்கைகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, வருமான வேறுபாட்டை மேலும் அதிகமாக்குகின்றனர். கடன் நிவாரண நடவடிக்கைகள் வருமான வேறுபாட்டைக் குறைக்கும் ஒருத் தீர்வாகச் சுட்டிக்காட்டுப்படுகின்றன. கடன் நிவாரண நடவடிக்கைகள் செயல்படுத்துவதனால், கடனுடைய வட்டி விகிதம் கூடுகிறது. இதனால், கடன் தேவைப்படும் ஏழை மக்கள் அவற்றைப் பயன்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் நடந்ததுப் போல், கொத்தடிமைத்தனத்தில் மாட்டிக் கொண்டவர்களைக் காப்பாற்றி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் வருமான வேறுபாடுக் குறையும் என்றப் பரவலானக் கருத்தும் இருக்கிறது. கொத்தடிமைத்தனத்தில் இருந்து விடுதலைச் செய்யப்பட்டவர்களின் பொருளாதார நிலைமை உயர்ந்தாலும், அவர்களைக் கொத்தடிமைகளாக வைத்திருந்த உரிமையாளர்களுக்கு நிவாரண நிதித் தொகை அளிக்கப்பட்டதினால், வருமான வேறுபாடுக் குறைவதற்குப் பதில், அதிக அளவிலேயே இருந்தது. பொருளாதாரச் சரிவுகள் வருமான வேறுபாட்டைச் சிறியக் காலத்திற்குக் குறைக்கின்றன. பொருளாதாரம் மீண்டும் வளர்ந்தவுடன் வருமான வேறுபாடு கூடுகிறது.  ஜனநாயகத்தில், உயர்த்தட்டு மக்கள், அரசியல் அதிகாரத்தைத் தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொள்வதினால், அவர்களின் செல்வத்தை அதிகரித்து, வருமான வேறுபாட்டைக் கூட்டுகின்றனர். கல்வியும் தொழில் நுட்ப வளர்ச்சியும் வருமான வேறுபாட்டைக் குறைக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும்,
ஆராய்ச்சியில், அவை வருமான வேறுபாட்டை அதிகரிக்கின்றன. 

No comments: